Skip to main content

'பெரியார்... கோட்சே' என்ன சொல்ல வருகிறார் சூர்யா..?

Published on 16/09/2019 | Edited on 16/09/2019


சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ பள்ளிக்கரணை அருகே  சாலையில் தனது பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்ததில் நிலை தடுமாறி சுபஸ்ரீ சாலையில் தூக்கி வீசப்பட்டார். பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறியதில் பரிதாபமாக  உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் நீங்கா அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பலரும் பேனர் வைக்க வேண்டாம் என வலியுறுத்தி வருகின்றனர்.

 

gh


 

dg



இந்நிலையில் நடிகர் சூர்யா ரசிகர்களிடம் யாரும் பேனர் வைக்க கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுக்குறித்து அவர் கூறியதாவது, "அனைத்து ஊர்களிலும் ரசிகர்கள் பேனர் வைக்க கூடாது. மேலும் வாழ்க்கையில் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதில் நேர்மையாக இருந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். வேறு ஒரு நடிகர் நடிக்க வேண்டிய படத்தில் நான் நடித்தால் அது நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை தொடர்ந்து வெற்றிபெற்று வருகிறது. ஒருவரின் வாழ்க்கை பற்றி பேசும் கதையை நான் எப்போதும் தவற விட மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் எந்த ஒரு நிகழ்விற்கும் முன்பும் ஒரு பெரிய வரலாறு இருக்கும். கோட்சே காந்தியை கொன்றதற்கு ஜாதி ரீதியாக, மதம் சார்ந்த பல்வேறு காரணங்கள் இருந்தது. இந்த சம்பவம் நடைபெற்ற போது பெரியார் கோட்சேவின் துப்பாக்கியை உடையுங்கள் என்றார். அவரிடம் கோட்சேவை பற்றி எதுவும் சொல்லாமல் அவனது துப்பாக்கியை ஏன் உடைக்க சொல்கிறீர்கள் என்று பதில் கேள்வி கேட்டனர். அதற்கு பெரியார் அவனும் ஒரு துப்பாத்திதான் என்று பதிலளித்தார்" என்றார்.
 

சார்ந்த செய்திகள்