Advertisment

வில்லனா நடிச்சாலே வெற்றிதானா? அஜித்தின் நெகட்டிவ் ரோல் சக்சஸ் பெர்சண்டேஜ் எவ்வளவு தெரியுமா?

 Is playing a villain a success??? Do you know Ajith's negative role success percentage?

Advertisment

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக அறிமுகமாகி இன்றோ ரக்கட் பாயாக சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வலம் வருகிறார் அஜித். பில்லா படத்திற்குப் பிறகு எந்த ஒரு ஆடியோ வெளியீட்டிற்கும் வருவதில்லை.பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வதில்லை.அவர் நடிக்கும் படத்தின் புரொமோசனில் கூட கலந்துகொள்வதில்லை. ஆனாலும் அஜித்திற்கு என்று ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.தீபாவளியாக இருந்தாலும் பொங்கலாக இருந்தாலும் அவரது ரசிகர்களுக்கு அஜித் படம் வெளிவரும் நாள் தான் திருவிழாவாக இருக்கிறது. அந்த வகையில் இந்த பொங்கலுக்கு வெளியாகும் அஜித்தின் துணிவு அவரது ரசிகர்களுக்கு இரட்டைப் பொங்கல் கொண்டாட்டம் என்றால் மிகையாகாது.

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை மக்கள் மனதில் இடம்பெறும் நாயகர்கள் சினிமாவில் நல்லவர்களாகவே இருப்பார்கள்.எப்போதாவது வில்லன் கதாபாத்திரமாகவோ, நெகட்டிவ்ரோலிலோ நடிப்பார்கள். ஆனால்வில்லனாகவே நடிப்பதும்நெகட்டிவ் ரோலில் ஹீரோயிசம் செய்வதும் கடந்த சில படங்களில் ஒரு ஸ்டைலாகவே இருந்து வருகிறது அஜித்தின்புதிய ரூட்.

வாலி படத்தில் உடன் பிறந்த தம்பி மனைவி மீதான காதலை வெளிப்படுத்தும் வாய் பேச முடியாத ரோலில் ஆரம்பமானது நெகட்டிவ் ரோல் பயணம்.அப்படியே அட்டகாசத்தில் அட்ராசிட்டி செய்து வரலாறு படத்தில் மூன்றில் ஒன்றாக நெகட்டிவ்வாக இருப்பார். அப்படியே பில்லா மற்றும் பில்லா 2, மங்காத்தா வரை பட்டியல் நீண்டது.

Advertisment

ரசிகர்கள் தன்னுடைய நாயகன் திரையில் தோன்றினாலே பார்ப்பார்கள்தான் ஆனால் பொதுவான ஆடியன்ஸ்ஸைகவரும் வகையிலும் சுவாரசியமாகவும் இந்தப் படங்கள் எல்லாம் வெற்றி வாகை சூடிய பட்டியலில் இருந்து வருகிறது. அந்த வகையில் துணிவு திரைப்படமும் ட்ரைலரிலேயே தெரிய வந்துவிட்டது நெகட்டிவ் ரோல் தான் என்று.

வாலி, அட்டகாசம், வரலாறு, பில்லா, பில்லா 2, மங்காத்தா மொத்தம் ஆறு படத்தில் ஒரு படத்தை தவிர 5 படமும் வெற்றி கண்டிருக்கிறது. இதில் பெர்சண்டேஜ் முறையில் பார்த்தால் 5/6x100 = 83 சதவீதம் வெற்றி. மீதமிருக்கிற 17 சதவீத வெற்றிடத்தை நிரப்பும் இடத்தில் துணிவு இருக்கிறதா என்பதும்., ஏற்கனவே வெற்றிப் படங்கள் வரிசையில் இப்படமும் இணைகிறதா என்றும்., அடுத்த வாரம் அப்டேட் தெரிந்து விடும்.

ACTOR AJITHKUMAR
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe