Skip to main content

ரியோ, ரம்யா நம்பீசன் நடித்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Published on 04/09/2021 | Edited on 04/09/2021

 

Plan Panni Pannanum

 

‘பானா காத்தாடி’ புகழ் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் சின்னத்திரை பிரபலம் ரியோ நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பிளான் பண்ணி பண்ணனும்’. இப்படத்தில் ரியோவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். பால சரவணன், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை, பாசிடிவ் பிரிண்ட் ஸ்டூடியோஸ் சார்பில் ராஜேஷ் குமார் மற்றும் எல்.சிந்தன் இணைந்து தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

 

இப்படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து ரிலீசிற்குத் தயாராக இருந்த நிலையில், கரோனா இரண்டாம் அலை காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் படத்தின் ரிலீஸில் சிக்கல் எழுந்தது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதையடுத்து, படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, வரும் செப்டம்பர் 24ஆம் தேதி ‘பிளான் பண்ணி பண்ணனும்’ படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இசையமைப்பாளர் தேர்வு என் விருப்பம் தான் - ‘ஜோ’ பட அனுபவம் பகிரும் ரியோ ராஜ்

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
 Joe Movie Actor Rio Raj Interview

சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளர், சீரியல் நடிகர், பிறகு வெள்ளித்திரையில் நடிகராக வலம் வருபவர் ரியோ ராஜ், சமீபத்தில் வெளியான ஜோ படத்தின் அனுபவம் பற்றி நக்கீரன் ஸ்டூடியோவில் பகிர்ந்து கொள்கிறார்.

ஜோ படக்குழு சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு ஒரே நேரத்தில் வந்தவர்கள். அந்த விதத்தில் அனைவரும் இணைந்து ஒரு வெற்றிப் படத்தில் இணைந்தது மகிழ்ச்சியாக உள்ளது. சின்னத்திரையிலிருந்து பெரிய திரை நோக்கி வந்த போது எல்லோருக்கும் இருப்பது போல பல கஷ்டங்கள், சிக்கல்கள் அதெல்லாம் ஒரு வெற்றியைப் பார்த்த பிறகு சரியாகிடும். 

என் பார்ட்னர் கூட முதல் நாள் முதல் காட்சியின் போது என்னை திரையில் பார்த்ததும் ரொம்ப எமோஷனல் ஆனாங்க, அது படம் பார்த்து வந்த அழுகை இல்லை. அதற்கு பின்னால் இருந்த என்னுடைய ஒரு நீண்ட போராட்டம் இருக்கு, அதை நினைத்து அழுதாங்க, அந்த வீடியோ கூட இணையத்தில் வைரல் ஆனது. படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு போனால் ரிலாக்ஸா உணர வைக்கிற ஒரு இடமாக வீடு எல்லாருக்கும் அமைய வேண்டும். எனக்கு அப்படி ஒரு பார்ட்னர் அமைந்திருப்பது பாக்கியம் தான்.   

ஜோ படத்தின் கதை கேட்டு முடித்ததுமே சித்துகுமார் தான் இசையமைப்பாளராக இந்த படத்திற்கு இருக்க வேண்டும் என்பது நான் கேட்டுக்கொண்டது. குறும்படம் எடுத்த காலத்திலிருந்தே சித்துகுமாரின் இசை எனக்கு ரொம்ப பிடிக்கும். அத்தோடு மிகவும் திறமையானவருக்கு ஜோ படத்தின் மூலம் இந்த வெற்றி கிடைத்தது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது.  

Next Story

“ஜோ பட பாடல் இவர் எழுதப்போறாருன்னு சொன்னதும் நம்பவில்லை” - இசையமைப்பாளர் சித்துகுமார்

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
Joe Movie Music Director Siddhu Kumar Interview

நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக இசையமைப்பாளர் சித்து குமாரை சந்தித்து பல்வேறு கேள்விகளை முன் வைத்தோம். அதற்கு அவரளித்த பதில்கள் பின்வருமாறு..

ஜோ படத்தின் பாடல்கள், பிண்ணனி இசை முடிந்து பைனல் அவுட்புட் எடுக்கும் போது இரு ஒரு கம்போசராக எனக்கு தனிப்பட்ட முறையில் ரொம்ப திருப்தியாக இருந்தது. திரையரங்கில் என்ன ரிசல்ட் வரும் என்பதெல்லாம் எனக்கு அப்போது தெரியாது. எனக்கு தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருந்தது. பெரும் வெற்றியைக் கண்ட பிறகு இன்னும் இந்த மகிழ்ச்சியை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு மனதினை பக்குவப்படுத்திக் கொண்டு இருக்கிறேன். 

ராஞ்சனா, ரப்னே பனா ஜோடி போன்ற பாலிவுட் படங்களின் இசைக்கோர்வை எப்போதும் எனக்குள் ஓடிக்கொண்டிருக்கும், அது நான் இசையமைக்கும் போது இன்ஸ்பிரேசனாகவும், ரொமாண்டிக் மூட் செட்டுக்கும் பயன்படும். சர்வதேச இசையமைப்பாளர்களின் இசை அதிகம் கேட்பேன், உறவுகள் தொடர்கதை பாடலை அடிக்கடி கேட்பேன், அது எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடலாகவும் எப்போதுமே இருக்கிறது.

ஜோ படத்திற்கு இசையமைக்கும் போது படத்திற்கு அப்பாற்பட்டு போய்விடக்கூடாது, அது படத்துடனேயே பயணிக்க விரும்பியே வேலையை ஆரம்பித்தேன். உருகி பாடல் தான் முதலாவதாக ஆரம்பமானது அதற்கடுத்த பாடலுக்கான வரிகள் கூட நாயகன் ரியோ தான் எடுத்துக் கொடுத்தாரு, அவர் பாடல் எழுதப்போறேன்னு சொன்னதும் நம்பவில்லை, அப்புறம் அதை தவிர்க்கும்படியாக இல்லாமல் சிறப்பாக இருந்ததால் ஏற்றுக்கொள்ளும்படியாகவும் ஆகிவிட்டது.