'சிம்புவால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களின் நிலை திரையுகத்துக்கே தெரியும்' - தயாரிப்பாளர் பி.எல். தேனப்பன்

str

டி.ராஜேந்தர் சமீபத்தில் சிம்பு நடித்த மன்மதன், வல்லவன் படங்களின் டப்பிங், ரீமேக் உரிமையும் என்னிடம் உள்ளது எனவும், அதை விற்க தயாரிப்பாளர் பி.எல். தேனப்பன் முட்டுக்கட்டை போடுகிறார் என்றும் குற்றம் சாட்டினார். இந்நிலையில் வல்லவன் பட தயாரிப்பாளர் பிஎல்.தேனப்பன் இது குறித்து விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்... "எனது நிறுவனத்தின் தயாரிப்பில் சிம்பு நடிப்பு மற்றும் இயக்கத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான வல்லவன் படத்தின் இந்தி மற்றும் வட இந்திய உரிமை என் நிறுவனத்துக்கு சொந்தமானது ஆகும். அந்த உரிமையை நான் சென்ற நவம்பர் 2016ஆம் ஆண்டு ஜெமினி லேபின் கடிதம் மூலம் முறையாக எஸ்.என் மீடியா என்ற நிறுவனத்திற்கு விற்பனை செய்துவிட்டேன். சமீபத்தில் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் இந்த உரிமைகள் தன்னிடம் உள்ளதாக கூறியிருக்கிறார். இந்த உரிமையை வாங்கியவர்கள், விற்றவர்கள் மீது பழி சுமத்தும் விதமாக பேசியுள்ளார்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

நான் வல்லவன் படத்தை தயாரித்து அதில் சிம்புவை இயக்குனராக அறிமுகப்படுத்தினேன். ஆனால் அவரது ஒத்துழையாமையால் படத்தின் பட்ஜெட் பல மடங்காகி அதனால் ஏற்பட்ட நஷ்டத்தினால் இன்றளவும் மீள முடியாமல் தவித்து வருகிறேன். என்னை போலவே எத்தனையோ தயாரிப்பாளர்கள் அவரால் பாதிக்கப்பட்டு எல்லாவற்றையும் இழந்து தவிப்பது திரையுகத்துக்கே தெரியும். இந்நிலையில் என்னையும் எனது 35 ஆண்டுகால திரையுல அனுபவத்தையும் கேலிக்கூத்தாக்கும் வகையில் பேசிய டி.ராஜேந்தரை வன்மையாக கண்டிக்கிறேன். என் பெயருக்கு களங்கம் விளைவித்ததற்காக அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடருவேன். இது தொடர்பாக போலீஸ் கமி‌ஷனரை சந்தித்து புகார் அளிக்க இருக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

Simbu simbu simbhu str aadhikravichandiran AAA str simbhu
இதையும் படியுங்கள்
Subscribe