Advertisment

சர்ச்சையில் சிக்கியுள்ள ‘பிதா’ படம்! 

pitha

'சவரக்கத்தி' படத்தில் இயக்குனராக அறிமுகமான ஆதித்யா தற்போது 'பிதா' என்னும் படத்தை இயக்குகிறார். இதில் எதிர்மறை வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் தயாரிப்பாளர் மதியழகன்.

Advertisment

மிஷ்கின், ஸ்ரீ கிரீன் சரவணன், மற்றும் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்ரேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் 'பிதா' படம், ஒரு தந்தைக்கும் மகளுக்குமான உறவை மையமாகக் கொண்டு உருவாகும் த்ரில்லர் வகைப்படமாகும். காணாமல் போன தன் மகளை எப்பாடு பட்டேனும் கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்று தீவிரமாகத் தேடும் ஒரு தந்தையின் வலியைப் பதிவு செய்யும் படமாக இது உருவாவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Advertisment

கடந்த 6ஆம் தேதி இப்படத்திற்கான துவக்க விழா பூஜை நடைபெற்றது. 'பிதா' படத்தில் நடிக்கும் நடிக நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கு கொண்டனர். மதியழகனைத் தவிர கலையரசன், ஆர்.ஜே.ரமேஷ் திலக், அனு கீர்த்தி வாஸ், ராதா ரவி ஆகியோருடன் வேறு சில முக்கிய நடிகர்களும் நடிக்கவிருக்கின்றனர். 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்திற்கு ஒளிப்பதிவு செய்த பிரசன்ன குமார் 'பிதா' படத்தின் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தை மிஷ்கின், ஸ்ரீ கிரீன் சரவணன், மாலிக் ஸ்ட்ரீம்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து தயாரிப்பதாகவே அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல போஸ்டரிலும் இந்த மூன்று நிறுவனங்களின் லோகோகளும் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “எங்கள் நிறுவனத்தின் லோகோவை ஸ்ரீகிரீன் நிறுவனம் தயாரிக்கும் 'பிதா' என்ற படத்தின் போஸ்டரில் பார்த்தோம். அந்தப் படத்துக்கும் எங்களுக்கும் எந்தவிதத் தொடர்பும்இல்லை. ஆகையால், இனிமேல் எங்களுடைய நிறுவனத்தின் பெயரையோ, லோகோவையோ போஸ்டரில் உபயோகிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்” என்றார்.

myskin pitha
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe