/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Eps1zTBUYAAFKy6_0.jpg)
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகை ஆண்ட்ரியா நடிக்கவிருக்கும் படம் பிசாசு 2. இப்படம் குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னரே வெளியான நிலையில், இப்படத்தின் பணிகள் கடந்த வாரம்பூஜையுடன் தொடங்கியது. பாடல் பதிவு உள்ளிட்ட முன் தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இப்படத்தின் நாயகியான ஆண்ட்ரியா, தனது 35-ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கானது வெளியிடப்பட்டுள்ளது. ராக்போர்ட் எண்டர்டைன்மென்ட் சார்பில் டி.முருகானந்தம் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதத்தில் துவங்கி, ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)