Advertisment

தள்ளிப்போகும் பிசாசு 2 - வெளியான லேட்டஸ்ட் தகவல்

pisasu 2 get postponed - latest information released

கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான பிசாசு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது 'பிசாசு 2' படத்தை மிஷ்கின் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முருகானந்தம் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வரும் 31 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் இரண்டாவது பாடலான 'நெஞ்சை கேளு' அண்மையில் வெளியானது.

Advertisment

இதனிடையே 'பிசாசு 2' படத்தை தணிக்கை குழுவிற்கு படக்குழு அனுப்பியதாகவும், படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் படக்குழுசில காட்சிகளை நீக்கி யு/ஏ சான்றிதழ் வாங்க மீண்டும் தணிக்கை குழுவிற்கு அனுப்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் படம் சொன்ன தேதியில் வெளியாகுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது குறித்து விரைவில் படக்குழு விளக்கமளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

Andrea Jeremiah director mysskin pisasu part 2
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe