
‘சைக்கோ’ படத்தைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான மிஷ்கின் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘பிசாசு 2’. கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான ‘பிசாசு’ படத்தின் இரண்டாம் பாகமான இப்படத்தில், ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முருகானந்தம் தயாரிக்க, கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு பூஜையுடன் படப்பிடிப்பைத் தொடங்கிய ‘பிசாசு 2’ படக்குழு, திண்டுக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பை நடத்திவந்தது.
பின், கரோனா இரண்டாம் அலைபொதுமுடக்கம் காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ள படக்குழு, தற்போது முழுவீச்சில் படப்பிடிப்பை நடத்திவருகிறது. இதற்கிடையே ‘பிசாசு 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ஆகஸ்ட் 3ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக சில தினங்களுக்கு முன் மிஷ்கின் அறிவித்தார். அதன்படி, ‘பிசாசு 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற இந்தப் போஸ்டர், தற்போது இணையங்களில் வைரலாகிவருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)