
கமல் தொகுத்து வழங்கி கடந்த ஆண்டு ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றி பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் சீசன் சமீபத்தில் ஆரம்பமாகி நடந்து வருகிறது. முதல் சீசனைப் போலவே இந்த சீசனும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இம்முறை நிகழ்ச்சியில் புதியதாக 16 பேர் பங்கேற்றுள்ளனர். அவர்களின் விவரம் வருமாறு...யாஷிகா ஆனந்த், பொன்னம்பலம், மும்தாஜ், தாடி பாலாஜி, நித்யா, ஜனனி ஐயர், மமதி சாரி, ஆனந்த் வைத்தியநாதன், சென்ட்ராயன், மகத், ஐஸ்வர்யா தத்தா, டேனியல் ஆனி போப், ரித்விகா, ஷாரிக் கான், ரம்யா, வைஷ்ணவி ஆகியோர் புதிதாக பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் சென்ற ஆண்டு வெளியானபோதே இந்த நிகழ்ச்சி பெரும்பாலான வீடுகளை ஆக்கிரமித்தது. குறிப்பாக சீரியல் பார்க்கும் பெண்மணிகளையும் ஈர்த்து டி.ஆர்.பி யில் தமிழின் முன்னணி சேனல்களை காலி செய்தது. அதுபோக தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன், தமிழ் யோகி போன்ற பைரஸி இணையத்தளங்களும் இந்நிகழ்ச்சியை தினமும் பிரத்தியோகமாக வெளியிட்டன. இதனால் இந்த நிகழ்ச்சி பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது. மக்களும் தேவை படும் நேரத்தில் பதிவிறக்கம் செய்து பார்த்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பைரஸி இணையதளங்கள் தற்போது வெளியிட்டு வருகின்றன. இதை தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பதிவிறக்கம் செய்து பார்த்து வருகின்றனர்.