இந்த வருடத்திலேயே அஜித் நடிப்பில் வெளியாகும் இரண்டாவது படம் நேர்கொண்ட பார்வை. இது ஹிந்தி படமான பிங்க் படத்தின் ரீமேக். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

Advertisment

balaiya

நேற்று வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பெண்களுக்கு நடைபெறும் அநீதியை பற்றி பேசும் இந்த படம், நல்ல சமூக கருத்தையும் கொடுக்கிறது.

Advertisment

இந்நிலையில், பிங்க் படத்தை மேலும் தெலுங்கில் ரீமேக் செய்ய பாலகிருஷ்ணா ஆர்வம் காட்டி வருவதாக சொல்லப்படுகிறது. கடைசியாக பால கிருஷ்ணா நடித்த என் டி ஆர் பயோபிக்கள் இரண்டும் ரசிகர்களிடையே சரியான வரவேற்பை பெறாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.