Advertisment

விமானத்தில் பொம்மன் - பெள்ளி தம்பதிக்கு பாராட்டு

Pilot gives a big shoutout to Elephant Whisperers' Bomman and Bellie

Advertisment

கார்த்திகி கோன்சால்வ்ஸ் இயக்கத்தில் குனீத் மோங்கா தயாரித்திருந்த ஆவணக் குறும்படம் 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்'. நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் யானை பணியாளர்களாக பணியாற்றி வருகின்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதி, தாயைப் பிரிந்து உடம்பில் காயங்களுடன் இருந்த ஒரு குட்டி யானையை ரகு எனப் பெயரிட்டு வளர்த்து வந்ததை குறித்து எடுக்கப்பட்டது. இப்படம் 95வது ஆஸ்கர் விழாவில் விருது வாங்கி இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்தது.

இதன் பிறகு உலகளவில் கவனம் பெற்ற பிரபலங்களாகிவிட்டனர் பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதி. முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த தம்பதிகளை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்து, தலா 1 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கினார். மேலும் இயக்குநர் கார்த்திகி அண்மையில் முதல்வரை சந்தித்து பாராட்டு பெற்றார். அவருக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி முதல்வர் கெளரவித்திருந்தார்.

இவர்களுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த தம்பதி விமானத்தில் பயணித்துள்ள நிலையில் விமானத்தில் இருந்த பயணிகள்அந்த தம்பதிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோவை வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவை பார்க்கையில், ஊட்டிக்கு அந்த தம்பதி விமானம் மூலம் திரும்பியுள்ளனர். அப்போது விமானி ஒருவர், "தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் படத்தின் நட்சத்திரங்கள் நம்முடன் பயணிக்கிறார்கள். அவர்கள் எங்கள் விமானத்தில் பயணிப்பது மகிழ்ச்சி" எனக் கூறினார். பின்பு பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதி அனைவரின் முன்பும் எழுந்து நிற்க பயணிகள் அனைவரும் அவர்களுக்கு கைதட்டி பாராட்டு தெரிவித்தனர். இந்த வீடியோ தற்போது சமுக வலைத்தளங்களில் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

95th Oscars awards flight oscar awards
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe