Pichaikkaran2

சசி இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான படம் ‘பிச்சைக்காரன்’. இப்படத்தை விஜய் ஆண்டனி தயாரித்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து, ‘பிச்சைக்காரன்’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளதாகக் கூறப்பட்டது.

Advertisment

இது தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாமல் இருந்த நிலையில், விஜய் ஆண்டனியும் இயக்குநர் சசியும் வேறுவேறு படங்களில் கவனம் செலுத்திவந்தனர். பின், ‘பிச்சைக்காரன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை தேசிய விருது வென்ற ப்ரியா கிருஷ்ணசாமி இயக்கவுள்ளதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. பின்னர், கதை தொடர்பான விவாதத்தில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இயக்குநர் ப்ரியா கிருஷ்ணசாமி இப்படத்தில் இருந்து வெளியேற, நடிகர் விஜய் ஆண்டனியே இப்படத்தை இயக்க முடிவுசெய்தார்.

Advertisment

இது தொடர்பான அறிவிப்பு கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்ட நிலையில், 'பிச்சைக்காரன் 2' படத்திற்கான படப்பிடிப்பு இன்று பூஜையுடன்தொடங்கியுள்ளது. இத்தகவலை தயாரிப்பு நிறுவனமான விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்ரேஷன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள்மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்களை விரைவில் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.