pichaikkaran 2 mivie antibikili poster releases

சசி இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான படம் ‘பிச்சைக்காரன்’. இப்படத்தை விஜய் ஆண்டனி தயாரித்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து, ‘பிச்சைக்காரன்’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இப்படத்தை தயாரிப்பது மட்டுமின்றி விஜய் ஆண்டனி இயக்கியும் வருகிறார்.சமீபத்தில் சமூகவலைத்தளம்முழுவதும் "பிகிலியோட எதிரி யாரு" என்றபோஸ்டர் வைரலாகி வந்தது. இது யாருடைய போஸ்டர் எந்த படத்தை பற்றியபோஸ்டர் எந்த தகவலும் தெரியாததால் பலரும் குழப்பத்தில் இருந்தனர்.

Advertisment

இந்நிலையில் அந்தபோஸ்டர் 'பிச்சைக்காரன் 2' படத்துடையதுஎன்றும், அந்த ஆண்டி பிகிலிநான் தான் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான புதிய போஸ்டரைவெளியிட்ட விஜய் ஆண்டனி,"'பிச்சைக்காரன் 2' படத்துலவர்ற நான்தான் 'ஆன்டிபிகிலி'அப்போ பிகிலியாரு என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கேள்வி ஏற்கனவே குழப்பத்தில் இருந்த ரசிகர்களை மேலும் குழப்பியுள்ளது. விஜய் ஆண்டனியின் பதிவை பார்த்தஒரு சிலர் 'ஆன்டிபிகிலி'நீங்கள் என்றால்,'பிகிலி'யாரு என்று சொல்லுங்கள்..? ஒருவேளை நீங்கள்தான் அந்தபிகிலியா...? பிச்சைக்காரன் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறீர்களா? பல கேள்விகளை முன் வைத்துவருகின்றனர்.

Advertisment