Advertisment

'பிச்சைக்காரன் 2' - மூளை மாற்று அறுவை சிகிச்சை குறித்து பேசும் விஜய் ஆண்டனி

Pichaikaran 2 Sneak Peek Trailer released

Advertisment

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியாகி அனைத்துத் தரப்பு ரசிகர்களிடத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ‘பிச்சைக்காரன்’. இப்படத்திற்கு கிடைத்த பெரும் வெற்றியைத் தொடர்ந்து அதன்இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இப்படத்தை தயாரிப்பது மட்டுமின்றி விஜய் ஆண்டனி இயக்கியும் நடித்தும் இசையமைத்தும் வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், மலேசியாவில் லங்காவி தீவில் நடந்த படப்பிடிப்பின் போது விஜய் ஆண்டனிக்கு விபத்து நடந்து தாடை மற்றும் மூக்கு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த விஜய் ஆண்டனி கிட்டத்தட்ட முழுவதும் குணமடைந்து விட்டதற்காகத்தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் ஸ்னீக் பீக் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இதில் படத்தின் முதல் 3.45 நிமிட வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவை பார்க்கையில், மூளை மாற்றுஅறுவை சிகிச்சை குறித்து படத்தில் பேசியுள்ளது போல் தெரிகிறது.இந்த ட்ரைலரை ட்விட்டரில் பகிர்ந்த படக்குழு "பணம் உலகத்திற்கு தீங்கு விளைவிக்கும்" என்று குறிப்பிட்டுள்ளது. இந்த ஸ்னீக் பீக் ட்ரைலர் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Advertisment

Pichaikkaran2 vijay antony
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe