
2016ஆம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான படம் பிச்சைக்காரன். விஜய் ஆண்டனி தயாரித்து, இசையமைத்து, நடித்திருந்த இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெற்றியடைந்தது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக சினிமா ஷூட்டிங் எதுவும் நடைபெறாமல் இருக்கிறது. இந்நிலையில் இந்த நாட்களை பயன்படுத்தி விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படத்திற்கான கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளார்.
இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக இந்தப் படத்தைத் தேசிய விருது வென்ற இயக்குனர் இயக்குவார் என்று விளம்பரப்படுத்தி வந்தது படக்குழு. நேற்று அது யார் என அறிவித்தது. கடந்த வருடம் தேசிய விருது வென்ற படமான பாரம் படத்தை இயக்கிய ப்ரியா கிருஷ்ணான் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது.
தற்போது 'பிச்சைக்காரன் 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. இந்தப் படத்தில் விஜய் ஆண்டனியுடன் நடிக்கும் நடிகர்களின் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.