பீனிக்ஸ் பட விழா; வருத்தத்தை பதிவு செய்த இயக்குநர்

392

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள படம் ‘பீனிக்ஸ்’. இப்படத்தை ஸ்டண்ட் இயக்குநர் அனல் அரசு இயக்கியுள்ளார். இதன் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில் வரலட்சுமி, சம்பத், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராஜலட்சுமி அனல் அரசு தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் தொடர்பாக சூர்யா சேதுபதி பேசியதாக சில விஷயங்கள் விமர்சனத்துக்கு உள்ளானது. மேலும் ப்ரொமோஷனில் ஈடுபட்ட அவர், பபுள்கம் சாப்பிட்டபடியே ரசிகர்களுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்திருந்தது ட்ரோல் செய்யப்பட்டது. பின்பு இதற்காக மன்னிப்பு கேட்டிருந்தார்.  

இந்த நிலையில் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் அனல் அரசு, சூர்யா சேதுபதியை ட்ரோல் செய்யும் நபர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். அவர் பேசியதாவது, “இந்த படத்தில் ரியல் சாம்பியன் உட்பட மொத்தம் 28 பேர் நடித்திருக்கிறார்கள். ஆனால் சூர்யா சேதுபதி மட்டுமே பேசு பொருளாக இருப்பது சின்ன வருத்தம். காரணம் சூர்யாவை தாண்டி நான் உட்பட பல பேருக்கும் இந்த படம் தான் அறிமுகம். நான் 32 வருஷம் ஃபைட் மாஸ்டராக இருந்து கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட முறை சாவினுடைய விளிம்பைப் பார்த்துவிட்டு வந்தவன். என்னை மாதிரி ஒரு டெக்னீஷியன் படம் எடுக்கும் போது, எங்களுடைய வாழ்க்கையும் இதில் அடங்கியிருப்பதை ட்ரோல் செய்பவர்கள் யோசிக்க வேண்டும். 

முன்னதாக விநியோகஸ்தர் சக்தி ஸ்ரீ கோபாலன், ரொம்ப அழகாக ஒன்று சொன்னார். விஜய் சேதுபதி நடிகராகி ஜெயித்த பின்பு அவரை பார்த்து மதுரையில் இருந்து ஒரு நூறு பேர் நடிக்க வந்தாங்க என்றார். அதே போல் நானும் இங்கே ஒன்று சொல்லிக்க விரும்புகிறேன். இத்தனை வருஷம் கடுமையாக உழைத்து ஒரு படம் தயாரிக்கிற அளவுக்கு நான் முன்னுக்கு வந்திருக்கிறேன் என்றால் இந்த படம் ஜெயித்ததற்கு பின்பு என்னை மாதிரி நிறைய டெக்னீஷியன்கள் தயாரிப்பாளராக முன்னுக்கு வருவார்கள். அப்படி வரும் போது ஒட்டுமொத்த இண்டஸ்ட்ரியில் இருக்கும் ஆட்களுக்கு வேலை கிடைக்கும். அதனால் இதை சூர்யா படம் மட்டும் எனப் பார்க்காதீர்கள். 28 பசங்களுடைய வாழ்க்கை என்றும் பாருங்கள். இதை நான் ஒரு வேண்டுகோளாக வைக்கிறேன்” என்றார். 

director Surya Sethupathi
இதையும் படியுங்கள்
Subscribe