Advertisment

போன வாரம் 7 படம்... இந்த வாரம் ஒரே ட்ரைலர் !

petta

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

ரஜினிகாந்த் - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள 'பேட்ட' படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் தணிக்கை குழுவினர் சமீபத்தில் இப்படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கினர். இதனால் திட்டமிட்டபடி படம் வெளியாவது உறுதியாகியுள்ள நிலையில் படத்தின் ட்ரைலர் வரும் டிசம்பர் 28ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வாமாக அறிவித்துள்ளது. சென்ற வாரம் 7 படங்கள் ரிலீசான நிலையில் இந்த வாரம் வெள்ளிக்கிழமை பெரிய பட ரிலீஸ் எதுவும் இல்லாததை சரிக்கட்டும் விதமாக 'பேட்ட' ட்ரைலர் வெளியாகிறது. ரஜினி கல்லூரி விடுதி வார்டனாக நடிக்கும் இப்படம் மதுரை பின்னணியில் உருவாகிவுள்ளது. மேலும் 'பேட்ட' படத்தில் ரஜினிகாந்துடன், சிம்ரன், திரிஷா, நவாசுதின் சித்திக், சசிகுமார், விஜய் சேதுபதி, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராமதாஸ், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

Advertisment

petta sunpictures karthicksubburaj rajini rajinikanth
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe