petta

Advertisment

ரஜினிகாந்த் - கார்த்திக்சுப்புராஜ் கூட்டணியில் உருவாகும் 'பேட்ட' படத்தின் 'மரண மாஸ்' என்ற சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில் படத்தின் 2வது சிங்கிள் பாடலான 'ஊலல்லலா' என தொடங்கும் பாடல் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்நிலையில் 'பேட்ட' படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை ரெட் ஜெய்ன்ட் நிறுவனம் பெற்றுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி, நவாஷுதின் சித்திக், த்ரிஷா, சிம்ரன், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், சசிகுமார் போன்ற நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ள இப்படம் வரும் பொங்கலன்று உலகமெங்கும் வெளியாகவுள்ளது.