style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ரஜினிகாந்த் - கார்த்திக்சுப்புராஜ் கூட்டணியில் உருவாகி வரும் 'பேட்ட' படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் சமீபத்தில் நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில் இப்படம் குறித்த முக்கிய தகவல் தற்போது கசிந்துள்ளது. அதன்படி 'பேட்ட' படத்தின் டீசர் வரும் டிசம்பர் 12ஆம் தேதி ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகவுள்ளதாகவும், மேலும் டீசருடன் படத்தின் சிங்கிள் பாடலும் வெளியாகவுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. மேலும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 16ஆம் தேதி நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. நாயகிகளாக சிம்ரன், த்ரிஷா ஆகியோர் நடிக்கும் இப்படத்தில் விஜய்சேதுபதி, பாபிசிம்ஹா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் வரும் ஜனவரி மாதம் பொங்கலன்று உலகமெங்கும் வெளியாகவுள்ளது.