petta

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

ரஜினிகாந்த் - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள பேட்ட படம் மதுரையில் நடக்கும் கதை என்றும், அதில் ரஜினி கல்லூரி விடுதி வார்டனாக நடிக்கிறார் என்றும், படம் மலைப்பகுதியில் நடக்கும் கதை என்றும் கூறப்பட்டது. அத்துடன் மதுரை பின்னணியிலும் படம் உருவாகிவுள்ளது என்றும் தகவல் வெளியானது. இந்நிலையில், தற்போது நாட்டையே உலுக்கும் ஆணவ கொலைகளை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் ஆணவ கொலைகள் தொடர்ச்சியாக நடக்கின்றன. இதுவரை 80க்கும் மேற்பட்ட ஆணவ கொலைகள் நடந்துள்ளதாக புள்ளி விவரம் சொல்கிறது. இந்த கொலைகளை பற்றிய படமாக பேட்ட தயாராகி உள்ளது என்று சமூக வலைத்தளத்தில் தகவல் பரவுகிறது. ரஜினிகாந்த் கல்லூரி வார்டன் என்பதால் அங்கு நடக்கும் காதல் மற்றும் கொலையை இந்த படம் அலசி இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.