Skip to main content

'பேட்ட' படம் உண்மையில் பொங்கலுக்கு வருகிறதா...? உண்மையை சொன்ன கார்த்திக் சுப்புராஜ் !

Published on 24/11/2018 | Edited on 24/11/2018
petta

 

 

ரஜினிகாந்த் - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகும் 'பேட்ட' படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வரும் டிசம்பர் 3ஆம் தேதியும், இரண்டாவது சிங்கிள் பாடல் 7ஆம் தேதியும் வெளியாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 9ஆம் தேதி நடக்கவிருக்கிறது என்று இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ட்விட்டரில் பதிவிட்டு, கூடவே படம் பொங்கலுக்கு ரிலீசாகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். 'பேட்ட' படத்தை பொங்கலுக்கு வெளியிடவேண்டாம் என்று தயாரிப்பாளர்கள் பலர் கேட்டுக்கொண்டு வருவதாக நேற்று தகவல்கள் வெளியான நிலையில் கார்த்திக் சுப்புராஜின் இந்த ட்வீட் படத்தின் பொங்கல் ரிலீஸை உறுதிப்படுத்தியுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இப்படத்தில் விஜய்சேதுபதி, சசிகுமார், பாபிசிம்ஹா, நவாசுதீன் சித்திக், சிம்ரன், திரிஷா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்