'வலிமை' படம் ஓடும் திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு

petrol bomb was hurled valimai movie release theater

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் கழித்து படம்வெளியாகியுள்ளதால்அஜித் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் கட்டவுட்டிற்கு பால் ஊற்றியும் திரையரங்கில் வலிமையை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் வலிமை திரைப்படம் ஓடும் திரையரங்கு ஒன்றில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. கோவை, காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள கங்கா யமுனா காவேரி திரையரங்கு முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பியோடியுள்ளனர். இதில் இருசக்கர வாகனம் ஒன்று மட்டும் சேதமடைந்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே சேலத்தில் உள்ளமல்டிபிளக்ஸ் திரையரங்கில் வலிமை படம் திரையிட தாமதமானதால் அஜித் ரசிகர்கள் திரையரங்கின் கண்ணாடி மற்றும் மேற்கூரையை உடைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து உடனடியாக படம் திரையிடப்பட்டதால் அங்கு மீண்டும் இயல்பு நிலை திரும்பியது.

ACTOR AJITHKUMAR ajith petrol bomb valimai
இதையும் படியுங்கள்
Subscribe