தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள 'வட சென்னை' படம் கடந்த ஆயுதபூஜை அன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில் 'வட சென்னை' படத்தில் உள்ள ஆபாச வசனங்களை நீக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை தலைமை செயலகத்தில் உள்ள முதலமைச்சர் தனிப்பிரிவில் தமிழ்நாடு ஏழை, எளியோர், நடுத்தர மக்கள் நல சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில்...
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
"நடிகர் தனுஷ் தயாரித்து நடித்துள்ள வடசென்னை திரைப்படம் வன்முறையை களமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. வடசென்னை மக்கள் பேசும் தமிழை ஆபாசமாகவும், அறுவறுக்கத்தக்க வகையிலும் படத்தில் காட்டுகின்றனர். பெண்களின் கண்ணியத்தை சிதைக்கும் வகையில் தகாத வார்த்தைகள் புகுத்தப்பட்டுள்ளன. நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் வெற்றிமாறனின் இந்த செயல், சென்னை நகர மக்களையும், பெண்களையும் கொச்சைப்படுத்துவதாக உள்ளது. எனவே வடசென்னை படத்தில் வரும் ஆபாச வசனங்களை நீக்குவதற்கு தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மனுவில் குறிப்பிடபட்டுள்ளது.