ரஜினியின் புதிய படத்தில் இணைந்த மற்றொரு பிரபலம் 

rajinikanth

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

'காலா' படத்தையடுத்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது டார்ஜிலிங்கில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரஜினியுடன் இப்படத்தில் நடிக்க ஏற்கனவே நடிகர்கள் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது படத்தின் சண்டைப் பயிற்சியாளராக பீட்டர் ஹெய்ன் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பீட்டர் ஹெய்ன் ஏற்கனவே ரஜினியுடன் சிவாஜி, எந்திரன் மற்றும் கோச்சடையான் உள்ளிட்ட படங்களில் பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

rajini rajinikanth karthicksubburaj sunpictures
இதையும் படியுங்கள்
Subscribe