"மீண்டும் நிர்வாணமாக நடிக்க வேண்டும்" - ரன்வீர் சிங்கிற்கு பீட்டா நிறுவனம் அழைப்பு

peta Company invites Ranveer Singh to act his ad

இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வரும் ரன்வீர் சிங் தற்போது 'சர்க்கஸ்' மற்றும் 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' படத்தில் நடித்து வருகிறார். அதோடு ஃபேஷன் மற்றும் மாடலிங்கிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார் ரன்வீர் சிங். அந்த வகையில் சமீபத்தில் ஒரு மேகசின் அட்டை படத்திற்காக ஆடை இல்லாமல் நிர்வாணமாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இவரது இந்த செயல் பெரும் சர்ச்சையை கிளப்பியது, இது தொடர்பாக அவர் மீது காவல் நிலையத்தில் புகாரும் கொடுக்கப்பட்டது. மேலும் மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் ரன்வீர் சிங்கிற்கு எதிராக நூதன முறையில் சிலர் போராட்டமும் நடத்தினர். இப்படி பலதரப்பிடம் இருந்த எதிர்ப்பு கிளம்ப சிலர் ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரன்வீர் சிங்கிடம் பீட்டா அமைப்பு தங்கள் 'ட்ரை வேகன்' பிரச்சாரத்துக்காக மீண்டும் நிர்வாணமாக போஸ் கொடுக்கும்படி அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக பீட்டா அமைப்பு வெளியிட்டுள்ள அழைப்பு கடிதத்தில், "பீட்டா இந்திய அமைப்பு சார்பாக வாழ்த்துக்கள். சமீபத்தில் உங்கள் ஃபோட்டோஷூட்டை பார்த்தோம். எனவே எங்கள் அமைப்பு, 'அனைத்து விலங்குகளும் ஒரே பாகங்களைக் கொண்டவை' என்ற கோஷத்துடன் நடத்தும் பிரச்சார விளம்பர படத்தில் நிர்வாணமாக நடிக்க பரிசீலிப்பீர்களா" என கேட்டுள்ளனர்.

ஏற்கனவே பீட்டா அமைப்பு இதே கோஷத்துடன் நடத்திய பிரச்சார விளம்பரத்தில் அமெரிக்க நடிகையும் மாடலுமான பமீலா ஆண்டர்சன் அரை நிர்வாணமாக நடித்துள்ளார். இந்த தகவலையும் அந்த அழைப்பு கடிதத்தில் பீட்டா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்த கடிதம் குறித்து ரன்வீர் சிங் விரைவில் பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Peta ranveer singh
இதையும் படியுங்கள்
Subscribe