person misbehavioured to actress aishwarya in captain miller  event

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கேப்டன் மில்லர்'. சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சிவராஜ் குமார், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கோக்கன், மூர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் வருகிற 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisment

ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் படக்குழுபுரொமோஷன் பணிகளை தொடங்கியுள்ளது. அந்த வகையில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியைப் பிரம்மாண்டமாகப் படக்குழு நடத்தியது. இதில் தனுஷ், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் உள்ளிட்ட படக்குழுவினர் மற்றும் மாரி செல்வராஜ் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisment

இந்நிகழ்ச்சியில் ரசிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்து அனைவரும் வெளியேறிக் கொண்டிருந்தநிலையில் கூட்டத்தில் ஒருவன்இப்படத்தில் நடித்த ஐஷ்வர்யாவிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. அதனால் ஐஷ்வர்யா, அந்த நபரை காலில் விழவைத்து கோபத்துடன் தாக்கியுள்ளார். இதனை அங்குள்ள நபர் வீடியோ எடுத்ததை தொடர்ந்து, அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக ஐஷ்வர்யா அவரது சமூக வலைதளபக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, “அந்தக் கூட்டத்தில், ஒரு பையன் என்னிடம் அத்துமீறினான். அந்த துணிச்சல் அவனுக்கு இருந்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உடனே நான் கூச்சலிட்டு அவனைதாக்க தொடங்கினேன். என்னைச் சுற்றி நல்ல, அன்பான மற்றும் மரியாதைக்குரிய மனிதர்கள் நிறைய இருக்கிறார்கள். ஆனால் இது போன்ற சில மனிதர்கள் சுற்றி இருப்பது மிகவும் பயமாக இருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

ஐஷ்வர்யா, தொகுப்பாளினியாகவும் இருந்து வருகிறார். சிலமாதங்களுக்கு முன்பு மன்சூர் அலிகான் நடித்த சரக்கு பட ஆடியோ வெளியீட்டு விழாவை ஐஷ்வர்யா தொகுத்து வழங்கிய போது, மேடையில் கூல் சுரேஷ் பேசிக்கொண்டிருக்கையில் ஐஷ்வர்யாவுக்கு திடீரென மாலை அணிவித்தார். இது சர்ச்சையானது குறிப்பிடதக்கது.