Advertisment

சிகப்பு சேலை...ஈரமான முடி... #metoo வில் நடிகை பகிரங்க குற்றசாட்டு 

perarakhanna

Advertisment

ஏ.எம்.ரெட் கார்பெட் பிலிம்ஸ் மற்றும் எஸ்.எஸ்.என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் புதுமுகங்கள் நடிக்கும் 'வேறென்ன வேண்டும்' படம் மூலம் நாயகியாக அறிமுகமாகும் தெலுங்கு நடிகை பிரெர்னா கண்ணா சமீபத்தில் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து 'மீடூ' இயக்கத்தில் பேசியபோது...‘ராமா ராமா கிருஷ்ணா கிருஷ்ணா’ என்ற தெலுங்கு படத்தின் வெற்றிக்கு பிறகு என்னைத் திரையுலகில் வழிநடத்த யாரும் இல்லை. இந்த துறைக்கு நான் அப்போது புதியவள். ஒருமுறை ஐதராபாத்திலிருந்து ஒரு நடிகர் என்னை அழைத்து தான் ஒரு படத்தை இயக்க உள்ளதாகவும், ஒரு கதாபாத்திரத்திற்காக என்னை தேர்வு செய்ய வேண்டும் என்றும் கூறினார். சிகப்பு நிறச் சேலையில், ஈரமான முடியுடன் ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு வரச் சொன்னார்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

என் அம்மாவை உடன் அழைத்துவரக் கூடாது என்பதையும் வலியுறுத்தி கூறினார். ஆனால் நான் அதிர்ஷ்டவசமாக என் அம்மாவையும் அழைத்துச் சென்றேன். பின் நாங்கள் அறையில் இருந்தபோது எனது ஐ லைனரை நீக்கச் சொன்னார். ஐ லைனர் இல்லாமல் எனது முகம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க விரும்புவதாக கூறினார். நான் கழிவறைக்கு ஐ லைனரை அழிக்கச் சென்றபோது, அந்த நடிகர் என் அம்மாவிடம் முகம் கழுவிவிட்டு வருவதாகக் கூறி, நான் என் கண்ணை துடைத்துக் கொண்டிருக்கும் போது, அவர் திடீரென்று கண்ணாடியை நோக்கி என்னைத் தள்ளியபடி கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயன்றார். நான் மிகவும் பயந்துபோய் அவரை தள்ளினேன். இவை அனைத்தும் சில விநாடிகளில் நடந்து முடிந்தன. பின்னர் அவர் என்னை மிரட்டத் தொடங்கினார். எனது அப்பா வயதுள்ள ஒருவர் இப்படி நடந்து கொண்டது கவலையும் ஆச்சரியத்தையும் தந்தது.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

பெண்கள் இணக்கமாகப் போவதால்தான் பெரிய படங்களில் பணியாற்றுகின்றனர் என்று சிலர் கூறுகின்றனர். இந்த மனப்போக்கை ஊக்குவிக்க முடியாது. இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் எனப் பலரும் தற்போது பாலியல் கொடுமைகளுக்கு எதிராக நிற்கின்றனர். ஒரு பெண் தனக்கு ஏற்பட்ட கொடுமையை வெளியில் சொல்வதற்கு முன்னர் மூன்று முறை யோசிப்பாள். அப்படி வெளியில் சொல்லும்போது அவளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். 'மீடூ' இயக்கம் ஒவ்வொரு பாலினத்தவரும் தங்களை அதிகாரம், பணம், செல்வாக்கு ஆகியவற்றின் மூலம் பாலியல் கொடுமைக்கு ஆளாக்குபவர்களிடம் இருந்து தற்காத்துக்கொள்ள உருவாகியுள்ளது. ஆண்களும், ஓரின சேர்க்கை சமூகத்தினரும் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளைப் பேச முன்வர வேண்டும். 'மீடூ' இயக்கம் பெண்களுக்கானது மட்டுமல்ல ஒவ்வொரு தனிமனிதருக்குமானது" என்றார்.

metoo
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe