bdbvdbvs

நடிகர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலி காரணமாக இரு தினங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். இதனையடுத்து, திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், விவேக்கின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து இயக்குனர் பேரரசு கவிதை ஒன்றை தற்போதுவெளியிட்டுள்ளார். அதில்...

Advertisment

"பசுமை

கருகியதே!

மனிதம்

மறைந்ததே!

பகுத்தறிவை பக்குமாய்

சொல்லும் பண்பு!

சக நடிகனை உயரத்தும்

அன்பு!

மக்களை சிரிக்க வைக்கும்

பல சிரிப்பு நடிகர்களின்

முகத்தில்

சிரிப்பு இருந்ததில்லை,

நீ

சிரித்த முகத்தோடு உள்ள

சிரிப்பு நடிகன்!

அனைவருக்கும்

பிடித்த மனிதனாய் வாழ்வது

ஆபூர்வம்!

அந்த அபூர்வம் நீ!

சம்பள அக்கறையுள்ள நடிகர்கள்

மத்தியில் - நீ

சமுதாய அக்கறையுள்ள நடிகன்!

கலாம் எங்களுக்கு

முன்னாள் ஜனாதிபதி!

உனக்கு அவர்

என்னாளும் தளபதி!

மண்ணில் மரம் நட்டாய்

எங்கள் மனதில்

மனம் நட்டாய்!

நகைச்சுவை நடிகர் என்பதைவிட

உன்னை

கருத்துச்சுவை நடிகர் என்பதே

பொருந்தும்!

விவேகமாய் வளர்ந்தாய்

வேகமாய் மறைந்தாய்!

இறப்புவரை பொறுப்பாய்

இருந்தாய்!

விழி மூடும் முன்னாள்வரை

விழிப்புணர்வு உரைத்தாய்!

வெள்ளித்திரையில்தான் - நீ

நகைச்சுவை நாயகன்

மக்கள் மத்தியில்

என்றும் கதாநாயகன்!

அடிக்கடி ' எஸ்கேப் எஸ்கேப் '

என்பீரே

இன்று இந்த உலகத்தைவிட்டே

எஸ்கேப் ஆகிவிட்டாய்!

நிலக்கும் என்றும்

உன் புகழ்!

-பேரரசு" எனக் குறிப்பிட்டுள்ளார்.