/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/107_42.jpg)
நடிகர்கள் விமல் மற்றும் சூரிநீண்ட நாட்களுக்குப் பிறகு இணைந்துள்ள படம் 'படவா'. இசையமைப்பாளர் ஜான் பீட்டர் ஜே ஸ்டுடியோஸ் இன்டர்நேஷனல் என்ற பேனரில் இப்படத்தை தயாரித்து இசையமைத்துள்ளார். கே.வி. நந்தா இயக்கும் இப்படத்தில்,ஸ்ரீதா கதாநாயகியாகவும்,'கேஜிஎஃப்' புகழ் ராம் வில்லனாகவும், தேவதர்ஷினி, நமோ நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் விஜய் ஆண்டனி, பேரரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.
இயக்குநர் பேரரசு பேசியதாவது, "நடிகர் விமல் வெற்றி அடைந்துகொண்டே இருக்க வேண்டும். 'படவா' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். இந்த திரைப்படம் விவசாயத்தை பற்றியது. 'கடைசி விவசாயி' தேசிய விருது பெற்றது, டிரைலரை பார்க்கும் போது அதுபோன்ற திரைப்படமாகத்தான் 'படவா' இருக்கும் என்று தோன்றுகிறது" என்றார்.
விஜய் ஆண்டனி பேசியதாவது, "ஜான் பீட்டர் மற்றும் கதாநாயகன் விமலுக்கும் வணக்கம். கண்டிப்பாக நீங்கள் பெரிய உயரத்தை தொடுவீர்கள். கதாநாயகன் விமல் நடிகர் சூரி சார் காம்போ நன்றாக இருக்கும். இது நல்ல திரைப்படமாக கட்டாயம் அமையும்." என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)