Advertisment

“சன்னி லியோனுக்காக இந்தி கத்துக்க வேண்டும்” - பேரரசு விருப்பம் 

perarasu said he must learn hindi ti speak sunny leone

Advertisment

எஸ். ஜெ. சினு இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பேட்ட ராப்'. ப்ளூ ஹில் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் வேதிகா, மைம் கோபி, ரமேஷ் திலக், பகவதி பெருமாள், விவேக் பிரசன்னா, ரியாஸ் கான், ராஜீவ் பிள்ளை, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மேலும் பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். டி. இமான் இசையமைத்துள்ள இப்படம் வருகிற 27ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் பிரபு தேவா, சன்னி லியோன், வேதிகா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்ட நிலையில் இயக்குநர் பேரரசு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அவர் பேசுகையில், “ரெண்டு மூணு வருஷத்துக்கு முன்னாடி இந்தி தெரியாது போடான்னு சொல்வாங்க. கேட்க சந்தோசமா இருந்துச்சு. அப்புறம் அதே வாசகத்தோடு டீ-சர்ட்டும் போட்டாங்க. அத பார்க்கும் போதும் சந்தோசமா இருந்துச்சு. ஆனா இப்போ கவலையா இருக்கு. என் பக்கத்துல சன்னி லியோன் உட்காந்திருக்காங்க. ரெண்டு வார்த்த இந்தியில் பேச முடியல. இதுக்காகவே இந்தி கத்துக்க வேண்டும்” என்றார். இவரது பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.

sunny leone perarasu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe