Advertisment

விஜய்யுடன் மீண்டும் இணைகிறாரா 'ஊர்' பட இயக்குனர்..? 

bdnddfB

Advertisment

'விஜய்' மற்றும் 'விஜய் சேதுபதி' ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 'மாஸ்டர்' படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், அடுத்ததாகநடிகர் விஜய் 'சுறா', 'சர்கார்' ஆகிய படங்களுக்குப் பிறகு, சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக மூன்றாவது முறையாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், இப்படத்தை ஏ.ஆர் முருகதாஸ் இயக்கவுள்ளதாகச்செய்திகள் வெளியான நிலையில், இப்படத்திலிருந்து ஏ.ஆர் முருகதாஸ் விலகியதாக தகவல் வெளியானது. கரோனாவால் படத்தின் பட்ஜெட் குறைக்கப்பட்டு முருகதாஸ் எதிர்பார்த்தச் சம்பளத்தைப் பட நிறுவனம் கொடுக்க தயங்கியதாலும், படத்தின் கதையில் தயாரிப்பு நிறுவனத்திற்குத் திருப்தி இல்லாததாலும் அவர் விலகியதாகக் கூறப்படுகிறது.இந்நிலையில், இப்படத்தை இயக்குனர் பேரரசு இயக்கவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே விஜய் நடித்த 'திருப்பாச்சி' மற்றும் 'சிவகாசி' படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

thalapathy 65
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe