Skip to main content

விஜய்யுடன் மீண்டும் இணைகிறாரா 'ஊர்' பட இயக்குனர்..? 

Published on 29/10/2020 | Edited on 29/10/2020

 

bdnddfB

 

'விஜய்' மற்றும் 'விஜய் சேதுபதி' ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 'மாஸ்டர்' படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், அடுத்ததாக நடிகர் விஜய் 'சுறா', 'சர்கார்' ஆகிய படங்களுக்குப் பிறகு, சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக மூன்றாவது முறையாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

மேலும், இப்படத்தை ஏ.ஆர் முருகதாஸ் இயக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியான நிலையில், இப்படத்திலிருந்து ஏ.ஆர் முருகதாஸ் விலகியதாக தகவல் வெளியானது. கரோனாவால் படத்தின் பட்ஜெட் குறைக்கப்பட்டு முருகதாஸ் எதிர்பார்த்தச் சம்பளத்தைப் பட நிறுவனம் கொடுக்க தயங்கியதாலும், படத்தின் கதையில் தயாரிப்பு நிறுவனத்திற்குத் திருப்தி இல்லாததாலும் அவர் விலகியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தை இயக்குனர் பேரரசு இயக்கவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே விஜய் நடித்த 'திருப்பாச்சி' மற்றும் 'சிவகாசி' படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பீஸ்ட்' செட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம்! புதிய கெட்டப்பில் விஜய்!

Published on 03/07/2021 | Edited on 03/07/2021
dgbdbdbg

 

'மாஸ்டர்' படத்தின் வெற்றி தந்த உற்சாகத்தில் இருந்த நடிகர் விஜய், தன்னுடய அடுத்த படத்திற்காக 'கோலமாவு கோகிலா' படப்புகழ் இயக்குநர் நெல்சன் திலீப்குமாருடன் கைகோர்த்தார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். பூஜையுடன் சென்னையில் படப்பிடிப்பை தொடங்கிய படக்குழு, அடுத்தகட்டப் படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா விரைந்தது. அங்கு படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்றுவந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக படக்குழு இந்தியா திரும்பியது. 

 

இந்த நிலையில், 'பீஸ்ட்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூகவலைதளங்களில் சமீபத்தில் வெளியாகி வைரலாகிவரும் நிலையில், கரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் ஜூலை 1ஆம் தேதி அன்று மீண்டும் தொடங்கியது. சென்னையில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விஜய் - பூஜா ஹெக்டே சம்பந்தப்பட்ட பாடல் காட்சி அங்கு படமாக்கப்பட்டு வரும் நிலையில் இந்த பாடலின் நடன இயக்குனர் ஜானியின் பிறந்தநாள் இந்த செட்டில் கொண்டாடப்பட்டுள்ளது. ஜானியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது தாடியுடன் இருக்கும் விஜய்யின் புகைப்படம்  தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

 

Next Story

'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு எப்போது..? எங்கே..?

Published on 25/06/2021 | Edited on 25/06/2021

 

gdshshsr

 

'மாஸ்டர்' படத்தின் வெற்றி தந்த உற்சாகத்தில் இருந்த நடிகர் விஜய், தன்னுடய அடுத்த படத்திற்காக 'கோலமாவு கோகிலா' படப்புகழ் இயக்குநர் நெல்சன் திலீப்குமாருடன் கைகோர்த்தார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். 'தளபதி 65' எனத் தாற்காலிகமாகப் பெயரிட்டு பூஜையுடன் சென்னையில் படப்பிடிப்பை தொடங்கிய படக்குழு, அடுத்தகட்டப் படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா விரைந்தது. 

 

அங்கு படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்றுவந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக படக்குழு இந்தியா திரும்பியது. இந்த நிலையில், 'தளபதி 65' படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதன்படி, 'பீஸ்ட்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூகவலைதளங்களில் வைரலாகிவரும் நிலையில், நிறுத்திவைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவுள்ளது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் தொடங்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.