Advertisment

“சினிமாவில் இருப்பவர்களே சினிமாவுக்கு ஆபத்தாக இருக்கிறார்கள்” - பேரரசு

46

கௌரி சங்கர் ரவிச்சந்திரன் மற்றும் ஆனந்த் பொன்னுசாமி தயாரிப்பில், இயக்குநர் எஸ்.எஸ். முருகராசு இயக்கத்தில், கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள படம் ‘கடுக்கா’. இப்படத்தில் விஜய் கௌரிஷ், ஸ்மேஹா, ஆதர்ஷ் மதிகாந்த், மஞ்சுநாதன், மணிமேகலை, சுதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கெவின் டெகோஸ்டா இசையமைத்துள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றுள்ளது. 

Advertisment

நிகழ்வில் இயக்குநர் பேரரசு பேசியதாவது, “தனஞ்செயன் ஒரு படத்தை ரிலீஸ் செய்கிறார் என்றால் அந்தப்படத்தில் விசயம் இருக்கும், படம் கண்டிப்பாக ஹிட்டாகும். கடுக்கா என்றால் காய் இல்லை நம்ப வைத்து ஏமாற்றுவது தான் கடுக்கா. படத்தில் இரண்டு ஹீரோ, அதில் யாருக்கு ஹீரோயின் கடுக்கா கொடுக்கிறார் என்பது தான் படம். ஆனால் ஹீரோயின் உண்மையிலேயே கடுக்கா கொடுத்தது தயாரிப்பாளருக்குத் தான்.  இவர்கள் கொடுத்த வாய்ப்பில் ஹீரோயின் ஆகிவிட்டு எந்த விழாவிற்கும் வரவில்லை. 

இசையமைப்பாளர் ஒரு பாட்டில் அனைவரையும் கவர்ந்து விட்டார். விஜய் கௌரிஷ் அட்டகத்தி தினேஷை ஞாபகப்படுத்துகிறார். நன்றாக நடிக்கிறார். கடுக்கா ஆடியன்ஸை ஏமாற்றாது.  சினிமாவில் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. சினிமாவில் இருப்பவர்களே சினிமாவுக்கு ஆபத்தாக இருக்கிறார்கள். அவர்கள் படம் மட்டும் ஜெயிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். யாரும் சினிமாவை காப்பாற்ற நினைப்பதில்லை. ஒரு படம் ரிலீஸாகிறது என்றால் அது விமர்சனத்துக்கு உள்ளானது. எல்லா படமும் அப்படித்தான். யார் நடித்த படமாக இருந்தாலும் அப்படித்தான். ஆனால் விமர்சனம் அந்த படத்தை பற்றி இருக்க வேண்டுமே தவிர தனிநபர்கள் மீது வன்மத்தை கக்கும் படி இருக்கக்கூடாது. இன்றைக்கு சாதி, மத, அரசியல் ரீதியாக விமர்சனம் வருகிறது. தனக்கு பிடிக்காத சாதியை சேர்ந்த இயக்குநர் படம் எடுக்கிறார் என்றால் அதை ஒழிகக் வேண்டும் என சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்” என்றார்.  

perarasu review
இதையும் படியுங்கள்
Subscribe