dhree

பிரபலங்கள் பலரும் 'இந்தி தெரியாது போடா', 'ஐயம் எ தமிழ் பேசும் இந்தியன்' போன்ற வாசகங்கள் பொறித்த டி-ஷர்ட்டுகளை அணிந்து சமூகவலைத்ததில் பதிவிட்டு வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது பெரும் விவாதமாக மாறியுள்ளது. டி-ஷர்ட்டில் இருந்த வசனம்தான் அந்த விவாதத்திற்கு பெரும் காரணமாக அமைந்தது. இதனை தொடர்ந்து பலரும் இந்தி திணிப்புக்கு எதிராக 'இந்தி தெரியாது போடா' என்ற வசனத்தை ட்ரெண்ட் செய்து வந்தனர். இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவிக்க, இன்னொரு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்ற நிலையில் இதுகுறித்து இயக்குனர் பேரரசு ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்...

Advertisment

"தமிழ் பேசும் அமெரிக்கன்!

தமிழ் பேசும் ஜப்பானியன்!

இதுதான் அதிசய செய்தியாகும்!

Advertisment

தமிழ் பேசும் இந்தியன் என்பதில் என்ன ஆச்சர்யம்???

தமிழன் இந்தியன்தானே?

தமிழ்மொழி இந்தியமொழிதானே?

உங்கள் அரசியலுக்கு எங்கள் மொழியை பயன்படுத்தாதீர்கள்!" என கூறியுள்ளார்.