/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/272_9.jpg)
தமிழகத்தின் குறுவை சாகுபடிக்காக காவிரியில் கர்நாடகா சார்பில் அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீரைத் திறந்துவிட வேண்டும் என டெல்லியில் கடந்த 26 ஆம் தேதி நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 87வது கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு கர்நாடகாவில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேபோல் கர்நாடகா சார்பில் தமிழகத்திற்கு உரிய தண்ணீர் திறக்காததைக் கண்டித்து தமிழகத்திலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மீண்டும் காவிரி விவகாரம் தீவிரமடைந்துள்ளது.
இந்த நிலையில் இயக்குநர் பேரரசு காவிரி விவகாரம் தொடர்பாக அவரது கருத்தை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கர்நாடகாவிற்கு சென்று காவேரி பிரச்சனையை பற்றி பேச தமிழ்நாட்டில் தகுதியான நபர் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி மட்டுமே. அங்கே காங்கிரஸ் ஆட்சி. இங்கே திமுக கூட்டணியில் காங்கிரஸ். தமிழக மக்களுக்காக அவரை தமிழக அரசு அவரை அனுப்பி வைக்கலாம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடகவிற்கு சென்று காவேரி பிரச்சனையை பற்றி பேச தமிழ்நாட்டில் தகுதியான நபர் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் மட்டுமே!
அங்கே காங்கிரஸ் ஆட்சி!
இங்கே திமுக கூட்டணியில் காங்கிரஸ்!
தமிழக மக்களுக்காக அவரை தமிழக அரசு அவரை அனுப்பி வைக்கலாம்!
— PERARASU ARASU (@ARASUPERARASU) September 30, 2023
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)