peranbu

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

Advertisment

‘தரமணி’ படத்தையடுத்து இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'பேரன்பு' படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்படம் குறித்து ராம் பேசியபோது.... "இந்த படத்தின் நாயகன் மம்முட்டி எல்லோரையும் போல் சுயநலமுள்ள சாதாரண மனிதர். இவர் எப்படி 'பேரன்பு' கொண்டவராக மாறுகிறார் என்பதே படத்தின் கதை. புதிரான ஒரு கதாபாத்திரத்தில் அஞ்சலி நடித்துள்ளார். சமுத்திரக்கனி, வடிவுக்கரசி, 'தங்க மீன்கள' புகழ் சாதனா, திருநங்கை அஞ்சலி அமீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்துக்காக ஒரு ஏரிக் கரையோரத்தில் வீடு போன்ற அழகான அரங்கு அமைக்கப்பட்டு, அதில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பி.எல்.தேனப்பன் தயாரித்து இருக்கிறார். பல்வேறு சர்வதேச பட விழாக்களில் கலந்து கொண்ட இந்த படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது" என்றார்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">