நயன்தாரா - விக்னேஷ் சிவன் படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்!!

nayanthara

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இந்நிறுவனம் தயாரித்துள்ள கூழாங்கல் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தை பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கியுள்ளார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

திரையரங்கு வெளியீட்டிற்கு முன்பாக இப்படத்தை திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் முடிவெடுத்துள்ளனர். இந்த வருடத்தின் தொடக்கத்தில் நெதர்லாந்தில் நடைபெற்ற ஒரு திரைப்பட விழாவில் இப்படம் விருது வென்றது. இந்த நிலையில், தற்போது மேலும் இரு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிட கூழாங்கல் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பின்லாந்தில் நடைபெறும் மிட்நைட் சன் திரைப்பட விழாவானது ஜூன் 17 தொடங்கி ஜூன் 24 வரை நடைபெறவுள்ளது. மேலும், லண்டன் இந்தியன் சர்வதேச திரைப்பட விழாவானது ஜூன் 17 முதல் ஜூலை 4 வரை நடைபெறவுள்ளது. இவ்விரு விழாக்களிலும் கூழாங்கல் திரைப்படம் திரையிடப்படவுள்ளது.

ACTRESS NAYANTHARA
இதையும் படியுங்கள்
Subscribe