people likes akilan role Veeramae Vaagai Soodum

Advertisment

‘எனிமி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கும் 'வீரமே வாகை சூடும்' படத்தில் விஷால்நடித்திருக்கிறார்.இதில் விஷாலுக்கு ஜோடியாகடிம்பிள் ஹயாத்தி நடிக்க, வில்லனாக பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் நடிக்கிறார். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் கடந்த 4 ஆம் அதிதி திரையரங்குகளில் வெளியாகிநல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இப்படத்தில் விஷாலின் தங்கையின் காதலனாக, விஷாலுடன் இரண்டாவது நாயகனாக நடித்துள்ளார் அகிலன் எஸ்.பி.ஆர். படம் முழுக்க வரும் இப்பாத்திரம் படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்துள்ளது.

இளம் நாயகனாக அறிமுகமாகியிருக்கும் அகிலன் தனது நடிப்பு திறமையால், பலரையும்கவர்ந்துள்ளார். ஆல்பம் பாடல்கள், குறும்படங்கள் மூலம் அறிமுகமான இவர் சிறிது சிறிதாக வளர்ந்து நாயகன் அந்தஸ்திற்கு உயர்ந்திருக்கிறார். 'வீரமே வாகை சூடும்' படம் இவருக்கு மிகப்பெரும் அங்கீகாரத்தை பெற்றுத்தந்துள்ளது. இப்படத்தில் இவரின்கதாபாத்திரம் குறித்து பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இதனைதொடர்ந்த்துபீட்சா 3 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துமுடித்துள்ள அகிலன் அடுத்ததாக சில தமிழ் படங்களிலும். ஒரு தெலுங்கு படத்திலும்நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.