Advertisment

‘கணவன் காணவில்லை’ என படத்தை புரொமோட் செய்த பாபநாசம் நடிகை...

பாபாநாசம் படத்தில் நடித்த ஆஷா சரத் சமீபத்தில் தன்னுடைய ஃபேஸ்புக்கில் வெளியிட்ட வீடியோ ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

asha sharath

அதில் தனது கணவரை சில நாட்களாக காணவில்லை. அவரை கண்டுபிடிப்பவர்கள் கட்டப்பனை போலீசில் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார். இதனால் அவரது ரசிகர்கள் முதல் பலரும் அதிர்ச்சியாகினர்.

Advertisment

சமீபத்தில்தான் ஆஷா சரத்தின் நடிப்பில் ‘எவிடே’ என்ற ஒரு படம் வெளியானது. இந்த வீடியோ வைரலான பின் தான் இது படத்தின் புரோமஷனுக்காக வெளியிடப்பட்ட வீடியோ என்று தெரியவந்துள்ளது. வெளியிட்ட வீடியோவிலும் எவிடோ படத்திற்கான விளம்பரம் என்று குறிப்பிட்டிருந்ததாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த வீடியோவுக்கு தற்போது எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அவருக்கு எதிராக போலீசில் புகார்கள் குவிகின்றன. ஆஷா சரத்தை பேஸ்புக்கில் 15 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். அவர்களில் பலர் ஆஷா சரத் வீடியோவை பார்த்து மன உளைச்சலுக்கு ஆளானதாக குறிப்பிட்டு உள்ளனர்.

மஜித் என்பவர் இடுக்கி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் அளித்த புகாரில் ஆஷா சரத்தின் வீடியோ தவறான முன் உதாரணத்தையும், மோசமான விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடியது. எனவே அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். புகார் மனு மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறார்கள்.

asha sharath malayalam
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe