Published on 06/06/2020 | Edited on 06/06/2020

அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் மிகவும் எதிர்பார்க்கப்படும் உளவியல் த்ரில்லர் திரைப்படமான 'பெண்குயின்' படத்தின் இரண்டாவது போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளது.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்தத் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ளார். அனைத்துத் தரப்பினரையும் கவரும் வண்ணம் எதிர்பார்ப்பை எகிற செய்யும் வகையில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வருகின்ற ஜூன் 8ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் மிக விரைவில் பிரத்தியேகமாக 'பெண்குயின்' திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் வரும் ஜூன் 19ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படம் நேரடியாக தமிழ் மற்றும் தெலுங்கிலும் மலையாளத்தில் டப்பிங் செய்யப்பட்டும் வெளியாக உள்ளது.