சக்தி சிதம்பரம் இயக்கத்தில், வடிவேலு நடிப்பதாக இருந்த படம் 'பேய்மாமா'. ஆனால், சில காரணங்களால் வடிவேலு நடிக்க முடியாமல் போனது. இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தில் யோகி பாபு நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
பாக்யா சினிமாஸ் பட நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, சமீபத்தில்நடைபெற்றது. இதில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு 'பேய் மாமா' படத்தின் இசையை வெளியிட்டார்.
இந்தநிலையில், படத்தின்ட்ரைலர்வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் ஜி.விபிரகாஷ், படத்தின்ட்ரைலரைதனதுட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 'பாகுபலி', 'பேட்ட', ரஜினி அரசியல்உள்ளிட்ட ரெஃபெரென்ஸ்களை, இந்த ட்ரைலர்கொண்டுள்ளது.