Advertisment

உதயநிதி ஸ்டாலின் படத்திலிருந்து விலகிய பிசி ஸ்ரீராம்... ‘காஷ்மீர் பெருமை கொள்ளும்’ அசோசியேட்டுக்கு வாழ்த்து

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் படம் சைக்கோ. இதில் நித்யா மேனன் மற்றும் அதிதி ராவ் இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்திருக்கிறார். முதன் முறையாக பாடகர் சித் இளையராஜா இசையில் பாடியிருக்கிறார்.

Advertisment

udhayanidhi stalin

இந்த படத்தில் ஒளிப்பாதிவாளராக பி.சி. ஸ்ரீராம் பணியாற்றினார். இந்நிலையில், தான் இந்த படத்திலிருந்து விலகிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அவரே தெரிவித்துள்ளார். மேலும், இந்த படத்திலிருந்து விலக காரணம், அலர்ஜி பிரச்சனை என்றும், வேறு ஒன்றுமில்லை என்பதை விளக்கியுள்ளார்.

Advertisment

இதனால் பி.சி.ஸ்ரீராமுக்குப் பதிலாக, அவரிடம் அசோஸியேட் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய தன்வீர், இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில், “வாழ்த்துகள் தன்வீர். டிஐ சிறப்பாக நடந்து கொண்டிருப்பது பற்றிய செய்தியைக் கேள்விப்பட்டேன். உனக்குத் தேவை என்றால், மிஷ்கின் உன்னை வழிநடத்துவார். எனக்கிருக்கும் அலர்ஜி பிரச்சினையால், என்னால் இந்தப் படத்தில் பணியாற்ற முடியாமல் போனது குறித்து அவர் புரிந்துகொண்டார்.

99% வேலையை நீயே செய்திருப்பதால், படத்தின் ஒளிப்பதிவாளராக உன் பெயர்தான் வரும். மிஷ்கின், உதயநிதி மற்றும் ஒட்டுமொத்தக் குழுவும் இந்த விஷயத்தில் உனக்கு ஆதரவுடன் இருப்பார்கள். உண்மை மட்டுமே நிலைக்கும். தன்வீர் என்ற கலைஞன் குறித்து காஷ்மீர் பெருமை கொள்ளும்” என தெரிவித்துள்ளார்.

pc sriram Udhayanidhi Stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe