pc sriram

Advertisment

சுஷாந்த் சிங் மரணத்திற்கு பிறகு தற்போது அவரது காதலி ரியா சக்ரபோரதியின் தம்பி கைது செய்யப்பட்டுள்ளார். தினசரி சுஷாந்த் சிங் குறித்தே இந்தி ஊடகங்களில் விவாதம் நடைபெற்று வருகின்றன. சுஷாந்தின் மரணம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் இதை சாடி பிசி ஸ்ரீராம் ட்வீட் செய்துள்ளார். அதில், “மும்பையில் ஒரு மரணம் நிகழ்ந்தது. இரண்டு மாதங்கள் ஊடகங்கள் பித்து பிடித்தது போலத் திரிந்தன, பார்வையாளர்களையும் அப்படியே ஆக்கின. ஊடகங்கள் செய்யும் விசாரணை மிக ஆபத்தானது. நாம் அந்த வலையில் சிக்கிவிட்டோம். ஊடகம் செய்யும் விசாரணை பொது மக்களைக் குழப்பும். இந்த தேசம் அழியப்போகிறது. ஜெய்ஹிந்த்.

அரசாங்கம் நடத்திய டிடி இன்றைய ஊடகங்களை விட நன்றாக இருந்தது. அதிக சக்தி இல்லையென்றால் அதிக செல்வாக்கு வரும்போது பொறுப்புகளும் அதிகமாகின்றன. அதிக அதிகாரம் வரும்போது நேர்மையற்ற அணுகுமுறையும் வந்துவிடுகிறது. உண்மையின் தரம் குறைந்துள்ளது. எல்லாம் டிஆர்பிக்காகத்தான். அதிகமான பணம்தான் டிஆர்பியின் மொழியைப் பேசும்” என்று தெரிவித்துள்ளார்.