"​​நீங்கள் அதை மதிக்கும் விதத்தை நான் கவனித்தேன்" - அக்ஷய் குமாரை பாராட்டிய பிசி ஸ்ரீராம்!

hrdhd

ரஜினிகாந்த், ஷங்கர் கூட்டணியில் உருவான 2.0 படத்தின்வில்லனும், முன்னணி பாலிவுட் நடிகருமான அக்ஷய் குமார் நேற்று தனது 53வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் இந்தியாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான பிசி ஸ்ரீராம் அக்ஷய் குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்...

"பிறந்தநாள் வாழ்த்துகள் அக்‌ஷய். 'பேட்மேன்' பட படப்பிடிப்பின்போது, ​​நீங்கள் காலை மற்றும் மாலை ஒளியை மதிக்கும் விதத்தை நான் கவனித்தேன். என்னைப் பொறுத்தவரை, இது ஒரு மிக உயர்ந்த பண்பு. ஒளியே சினிமாவை உருவாக்குகிறது; எங்கள் பட தயாரிப்பு போர்களில் ஒளியை வைத்தே பாதி வென்றிருக்கிறோம். எப்போதும் நல்ல அன்பிலும், வெளிச்சத்திலும் இருக்க உங்களுக்கு என் சிறப்பான வாழ்த்துகள்!" என கூறியுள்ளார்.

pc sriram
இதையும் படியுங்கள்
Subscribe