Advertisment

“ஒவ்வொரு படமும் ஒரு பாடம்” - மாரி செல்வராஜ் படம் குறித்து பி.சி ஸ்ரீராம் 

pc sreeram about mari selvaraj vaazhai movie

துருவ் விக்ரமை வைத்து ‘பைசன்’ என்ற படத்தை இயக்கி வரும் மாரி செல்வராஜ், தற்போது ‘வாழை’ என்ற தலைப்பில் ஒரு படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை மாரி செல்வராஜின் மனைவி திவ்யாவின் பெயரில் உருவாக டிஸ்னி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் நவ்வி ஸ்டூடியோஸ் இணைந்து வழங்குகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மாரி செல்வராஜின் அக்கா மற்றும் மாமன் மகன்களான ராகுல் மற்றும் பொன்வேல் ஆகியோர் இப்படத்தில் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் இணைந்து மேலும் இரண்டு சிறுவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Advertisment

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பரில் வெளியானது. அதனைத் தொடர்ந்து இப்படத்தின் முதல் பாடல் ‘தேன் கிழக்கு...’ கடந்த மாதம் 18ஆம் தேதி வெளியாகியிருந்தது. இப்பாடல் ஆசிரியர் - மாணவன் உறவை விவரிக்கும் வகையில் அமைந்திருந்தது. யுகபாரதி வரிகளில் அப்பாடலை தீ பாடியிருந்தார். இதையடுத்து 29ஆம் தேதி படத்தின் இரண்டாவது பாடலான ‘ஒரு ஊருல ராஜா...’ வெளியானது. இப்பாடல் படத்தில் வரும் நான்கு சிறுவர்கள் படும் கஷ்டத்தையும் சந்தோஷத்தையும் விவரிக்கும் வகையில் அமைந்திருந்தது.

Advertisment

இந்த நிலையில் இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீ ராம் பாராட்டியுள்ளார். அவரது எக்ஸ் தளப் பக்கத்தில், வாழை படப் போஸ்டரை பகிர்ந்து, “இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தை வெளிக்கொண்டு வருகிறது. உங்கள் மனதை வருடும். பேசவிடாமல் செய்யும். ஒவ்வொரு படமும் ஒரு பாடம்” என குறிப்பிட்டுள்ளார். இதற்கு மாரி செல்வராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.

mari selvaraj pc sriram
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe