Advertisment

"பாஜக, ஆர்எஸ்எஸ் ஆட்டம் முடிந்துவிட்டது" - பி.சி ஸ்ரீராம் அதிரடி

pc sreeram about bjp and rss

பிரபல ஒளிப்பதிவாளராக பி.சி ஸ்ரீராம் தொடர்ந்து சமூக பிரச்சனைகள் குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். சமீபலகாலமாக பாஜக, மற்றும் தமிழக ஆளுநர் குறித்து அதிகம் விமர்சனம் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார்.

Advertisment

ஊழலுக்கு எதிரான இந்திய இயக்கத்தின் தேசியக் குழுவில் உறுப்பினராக இருந்த சந்திர மோகன், ஊழலுக்கு எதிராக அண்ணா ஹசாரே நடத்திய போராட்டம் தொடர்பாக ஒரு தனியார் நிறுவனத்திற்கு நேர்காணல் அளித்திருந்தார். அந்த நேர்காணலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கருத்து தெரிவித்த பி.சி ஸ்ரீராம், "ஊழலுக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் நம்மை ஆர்எஸ்எஸ் அழைத்து சென்ற பயணம், மிகவும் ஆபத்தான பேயான பாஜகவுக்கு வழிவகுத்தது. அவர்கள் மிகவும் ஆபத்தான மிருகங்கள். அதிகாரத்துக்காக எந்த எல்லைக்கும் இறங்குவார்கள். ஆனால், அவர்களின் ஆட்டம் முடிந்துவிட்டது எனத்தற்போது உணர்ந்திருப்பார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

pc sriram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe