"டைம் டூ லீட்" - வைரலாகும் பி.சி ஸ்ரீராம் பதிவு

pc sreeraam tweet about karnata election

கர்நாடக மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை பரபரப்பாகவே தொடங்கியது. முதல் ஒரு மணி நேரம் காங்கிரஸ் - பாஜக சம பலத்துடன் முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்தது. ஆனால் ஒரு மணி நேரத்திற்கு பிறகு அடுத்தடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கைகளின் முடிவுகள் வெளியாக வெளியாக சம பலத்துடன் இருந்த பாஜகவில் படிப்படியாக சரிவு ஏற்பட காங்கிரஸ் கட்சியில் முன்னேற்றம் ஏற்பட்டதைப் பார்த்து கர்நாடகம் மட்டுமின்றி இந்தியா முழுவதுமே காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்கின்றனர்.

இதனிடையே பிரபலங்கள் பலரும் காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் ட்வீட்டும் வைரலாகி வருகிறது. அந்த பதிவில், "மதச்சார்பற்ற எண்ணங்கள் விழித்துக்கொண்டன. டைம் டூ லீட்" என பதிவிட்டுள்ளார்.

congress karnataka election pc sriram
இதையும் படியுங்கள்
Subscribe