pc sree ram about cm stalin

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது அரசியல் வாழ்க்கையை எடுத்துக்கூறும் விதமாக சென்னையில் அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் வடசென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் 'எங்கள் முதல்வர்; எங்கள் பெருமை' என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மதுரையில் அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடந்தது. இதனைத்தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திருச்சியில் கடந்த 23ஆம் தேதி தொடங்கியது. இதை நடிகர் பிரபு தொடக்கி வைத்தார்.

Advertisment

இந்தக் கண்காட்சியை திரைப்பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் பார்வையிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இந்த கண்காட்சியை பார்வையிட்டார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "நெடுநாள் கழித்து நமது தமிழ்நாட்டின் முதல்வரை பார்த்தது பெருமையாகவுள்ளது. முதல் முறை முதல்வரை பற்றி பார்த்துவிட்டு பெருமைப்படுகிற தருணம் இது. நமது வாழ்வில் நம்மைச் சுற்றி ஆரோக்கியமானதாக பல விஷயங்கள் தற்போது இருக்கிறது. அதன் வழியே போனால் தான் நல்லது நடக்கும் என நம்புகிறவன் நான். இந்த ஆரோக்கியச் சூழலுக்கு தலைவராக மு.க.ஸ்டாலின் இருப்பது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு" என்றார்.

Advertisment