pazha karupaiya

Advertisment

முன்னாள் எம்.எல்.ஏவும் 'சர்கார்' படத்தில் நடித்தவருமான பழ.கருப்பையா நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து பேசியபோது...

'சர்கார்' படத்தில் விஜய்யுடன் நடிக்க கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது அவரிடம் ஒரு உறுதி இருக்கிறதை நான் பார்த்தேன். தான் அளப்பரிய அன்பு செலுத்தும் இந்த உலகத்துக்கும், இளைஞர்களுக்கும் அவர் திரும்ப ஏதாவது செய்ய வேண்டும் என்று என்னிடம் சொன்னார். மேலும் எல்லா நடிகர்களும் களைத்துப்போன காலத்தில் அரசியலுக்கு வருகிறார்கள். ஆனால் நான் விறுவிறுப்பாக இருக்கும் காலத்திலேயே அரசியலுக்கு வரவேண்டுமா என்று சிந்தித்து கொண்டிருக்கின்றேன் என்றும் சொன்னார். ஆனால் அவர் இப்போது அரசியலுக்கு வருவாரா என்பது எனக்கு தெரியாது. ஆனால் விஜய் உறுதியாக அரசியலுக்கு வருவார்.