வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த வருடம் நவம்பர் மாதம் வெளியான படம் அசுரன். பூமணி எழுதிய வெக்கை என்னும் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம் வெளியாகி பல தரப்பு மக்களையும் ஈர்த்து, சென்றாண்டின் சிறந்த படங்கள் லிஸ்டில் இடம் பிடித்தது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்திருந்தார். மேலும், டீஜே, கென் கருணாஸ், அம்மு அபிராமி, பவன், நரேன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர். இந்த படத்தின் 100 நாள் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

pawan

Advertisment

அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பவன், “அரிதாக நடக்கின்ற விஷயம், நான் கடைசியா குருவி படத்திற்குதான் 150 நாள் விழாவுக்கு சென்றிருந்தேன். அது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. ஆனால், அசுரன் கண்டிப்பாக 100 நாள் ஓடியது நடந்திருக்கிறது என்று பவன் சொன்னவுடன் மேடையில் அமர்ந்திருந்த தனுஷ் சங்கடத்தில் நெளிந்தார். கீழே அமர்ந்திருந்தவர்களோ அவர் பேச்சை கேட்டு சிரிப்பும், சலசலப்புமாய் இருந்தனர்.

Advertisment

மேலும் பேசிய பவன், “ அப்போவே சொன்னாங்க என்ன பேசவிட்டாலே டேஞ்சர்னு, எனக்கு பேச வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி என்று தன்னுடைய பேச்சை முடித்தார்.